`துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது!'- பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழிசை காட்டம் | Tamilisai Express her Emotion on Pollachi Issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:08 (12/03/2019)

`துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது!'- பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழிசை காட்டம்

பொள்ளாச்சி


பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் அளித்த புகார் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இளைஞர்கள் சிலர் தனக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் அளிப்பதாக அந்தப் பெண் தரப்பில் முதலில் புகார் பதிவானது. புகாரைப் பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிலரைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டது. அந்த இளைஞர்களிடம் இருந்த ஆபாச வீடியோக்கள் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. இளம்பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள். 

நண்பர்கள், காதலர்கள் என்ற போர்வையில் இளம்பெண்களை ஏமாற்றி தங்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்த அந்தப் பெண்களை தொடர்ந்து மிரட்டி தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வந்துள்ளனர். இந்தப் பிரச்னை தற்போது தமிழகத்தில் பூதாகரமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 4 இளைஞர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேரால் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியாது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கலாம் எனச் சந்தேகம் வலுக்கிறது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பெண்ணினம் கசக்கப்படுவதையும்.. நசுக்கப்படுவதையும்.. துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், சிறப்புப் புலனாய்வு வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
 


[X] Close

[X] Close