`பெண்ணை மதிக்கச் சொல்லிக்கொடுங்கள்!’ - பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திரையுலகினர் ஆவேசம் | Chinmayi and karu pazhaniappan Tweet About Pollachi Issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:03 (12/03/2019)

`பெண்ணை மதிக்கச் சொல்லிக்கொடுங்கள்!’ - பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திரையுலகினர் ஆவேசம்

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் பற்றிய செய்திகள் இன்று காலையிலிருந்து அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்றுள்ளது. தமிழகத்தையே உலுக்கியுள்ள அந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதும், சம்பந்தப்பட்டவர்கள் பின்னணி குறித்தும் வெளியாகும் தகவல்கள் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. 

சின்மயி

சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் ஒருமித்த குரலில் இந்தச் சம்பவத்துக்கு வன்மையான கண்டனங்களைப் பதிவுசெய்த வண்ணம் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து, பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் `மீடூ’ விவகாரத்தைத் தமிழகத்தில் கவனத்துக்கு கொண்டுவந்த பாடகி சின்மயி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். `` சிறுமி ஒருவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற வீடியோக்களை ஷேர் செய்யாதீர்கள். கோபத்தை வரவழைக்க இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம். கோரமான மக்கள்" எனப் பதிவிட்டுள்ளார். 

கரு பழனியப்பன்

அதேபோல இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், ``பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை'' என்று கூறியுள்ளார்.


[X] Close

[X] Close