திண்டுக்கல் தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்குகிறதா அ.தி.மு.க? | AIADMK may allotted Dindigul constituency to PMK

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:03 (16/03/2019)

திண்டுக்கல் தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்குகிறதா அ.தி.மு.க?

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வரலாற்றில் முக்கியமான தொகுதி. கட்சி தொடங்கிய பிறகு அ.தி.மு.க முதன் முறையாகப்  போட்டியிட்டது திண்டுக்கல் தொகுதியில்தான். அதனால் கட்சி தொடங்கியதிலிருந்து இன்று வரை கூட்டணிக்கு ஒதுக்காமல் அ.தி.மு.கவே போட்டியிட்டது. இந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க-வுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

திண்டுக்கல் தொகுதி  

வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் இருவருக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருகிறது. இதனால் இந்தத் தொகுதியை பா.ம.கவுக்கு அ.தி.மு.க தலைமை ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரான கவிஞர் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிறது பா.ம.க தரப்பு. திலகபாமா பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி. கணவரின் ஊர் சிவகாசி. பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இது தொடர்பாக இன்று பா.ம.க-வினர் திண்டுக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close