திருப்பூர் அருகே அரசுப் பள்ளிக்குக் கட்டம் கட்ட நிதி - தன் சேமிப்பான 38,000 கொடுத்து நெகிழ வைத்த சிறுமி | 8 years old girl donated her savings amount for government school building work

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (11/03/2019)

திருப்பூர் அருகே அரசுப் பள்ளிக்குக் கட்டம் கட்ட நிதி - தன் சேமிப்பான 38,000 கொடுத்து நெகிழ வைத்த சிறுமி

திருப்பூரைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி ஒருவர் அரசுப் பள்ளியில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்காக தான் சேமித்து வைத்திருந்த சுமார் 38,000 ரூபாய் பணத்தை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்டுத்தியிருக்கிறது.

சிறுமி

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இங்கு மொத்தம் 1140 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான முயற்சியில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இறங்கியுள்ளனர். இதற்காக அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து மொத்தம் 8 புதிய வகுப்பறைகளைக் கட்ட தீர்மானித்துள்ளனர்.

சிறுமி

இவர்களுடன் கட்டுமான செலவினங்களுக்கு உதவியாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும்கூட தங்களால் முடிந்த அளவு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறார்கள்.

சேமிப்பு

அதனடிப்படையில் திருப்பூர் சொர்ணபுரி பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் - வித்யா தம்பதியரின் 8 வயது மகள் சஷ்டிதா, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சுமார் 38,288 ரூபாய் பணத்தை அன்பளிப்பாக அந்த அரசுப் பள்ளியின் கட்டடப் பணிகளுக்கு வழங்கினார். வேறு ஒரு தனியார் பள்ளியில் 3 - ம் வகுப்பு பயின்று வரும் மாணவி சஷ்டிதா, அரசுப் பள்ளியின் பயன்பாட்டுக்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அன்பளிப்பாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.


[X] Close

[X] Close