எஸ்.எம்.இ. உரிமையாளர்களே! பெரிய நிறுவனமாக வளர உங்களுக்கோர் நல்வாய்ப்பு! | SME to Corporate program at coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (11/03/2019)

எஸ்.எம்.இ. உரிமையாளர்களே! பெரிய நிறுவனமாக வளர உங்களுக்கோர் நல்வாய்ப்பு!

எஸ்.எம்.இ. நிறுவன உரிமையாளர்களின் கனவு, எதிர்காலத்தில் தங்கள் நிறுவனத்தை பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே. எஸ்.எம்.இ. நிறுவனங்களை பெரிய நிறுவனமாக வளர்ச்சியடையச்செய்வது எப்படி என்பது குறித்து நாணயம் விகடன் மற்றும் ஜோஹோ இரண்டும் இணைந்து, 'எஸ்.எம்.இ. to லார்ஜ் கார்ப்பரேட்' என்ற கருத்தரங்கை கோவை மாநகரில் நடத்துகின்றன. 

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்களே, உங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஓர் அரிய வாய்ப்பு. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு முதுகெலும்பு போன்றவை. எஸ்.எம்.இ. நிறுவன உரிமையாளர்களின் கனவு, எதிர்காலத்தில் தங்கள் நிறுவனத்தைப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே. எஸ்.எம்.இ. நிறுவனங்களைப் பெரிய நிறுவனமாக வளர்ச்சியடையச்செய்வது எப்படி என்பது குறித்து நாணயம் விகடன் மற்றும் ஜோஹோ இரண்டும் இணைந்து, 'எஸ்.எம்.இ. to லார்ஜ் கார்ப்பரேட்' என்ற கருத்தரங்கை கோவை மாநகரில் நடத்துகின்றன. 

தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தின் துணையின்றி ஒரு எஸ்.எம்.இ. நிறுவனத்தைப் பெரிய அளவில் வளர்ப்பது முடியாது. நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு எப்படியிருக்கிறது என்பது குறித்து, இந்த துறை சார்ந்த நிபுணர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்கள். 

தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது சில நடைமுறைச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் நிறுவனத்தின் வளர்ச்சி தடைபடக்கூடும். இவ்வாறு பெரிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்போது அதைச் சார்ந்தியங்கும் எஸ்.எம்.இ. நிறுவனங்களையும் அது பாதிக்கிறது. எனவே, பெரிய நிறுவனங்களுக்கு ஊன்றுகோலாக விளங்கும் எஸ்.எம்.இ நிறுவனங்கள், அந்த பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்வதும், தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்துவதும் அவசியமாகிறது. 

எஸ்.எம்.இ

இதுபோன்ற தடைகளைத் தாண்டிவருவது குறித்தும், தீர்வு குறித்தும், டைகூன் ப்ளஸ் அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.சத்திய குமார், எல்&டி. டெக்னாலஜி சர்வீஸஸ், பிரின்சிபல் டெக்னாலஜி லீடர் ஜி.பி.பொன்மணிவண்ணன், ஜோஹோ கார்ப்பரேஷன் டைரக்டர் ராஜேந்திரன் தண்டபாணி ஆகியோர், கருத்தரங்கில் விரிவாகச் சிறப்புரையாற்றவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி, வரும் 17.3.2019, ஞாயிறன்று, காலை 10 மணி முதல் 1 மணி வரை, கோவை, பீளமேடு, அவிநாசி சாலையிலுள்ள விஜய் எலென்ஸாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.எம்.இ நிறுவன உரிமையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, வெற்றிக்கதையின் முதல் அத்தியாயத்தை இங்கிருந்து தொடங்கலாம்.


[X] Close

[X] Close