"மோசமான கூட்டணி மட்டுமல்ல, மோசடியான கூட்டணியும் கூட"- அ.தி.மு.க கூட்டணியை விளாசிய பிரகாஷ் காரத் | Prakash karath public meeting at Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:06 (16/03/2019)

"மோசமான கூட்டணி மட்டுமல்ல, மோசடியான கூட்டணியும் கூட"- அ.தி.மு.க கூட்டணியை விளாசிய பிரகாஷ் காரத்

``மக்களவைத் தேர்தலில் தமிழகம் சாதனை படைக்க வேண்டும்" என்று சி.பி.எம். தலைவர் பிரகாஷ் காரத் கேட்டுக் கொண்டார்.

பிரகாஷ் காரத் கூட்டம்

மதுரையில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியவர், ``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மோசமான கூட்டணி மட்டுமல்ல; மோசடியான கூட்டணி ஆகும். இந்த அணியை மக்களைவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும். 2004 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான அரசை வீழ்த்த தி.மு.க சார்பில்  பிரமாண்டமான அணி   உருவாக்கப்பட்டது. அதைவிட இன்றைக்கு பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கும்பலால் நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை கட்டமைப்பைச் சிதைக்க, அரசியல் சாசனத்தை அழித்தொழிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. பி.ஜே.பி கூட்டணியைத் தோற்கடித்து மக்களவைத் தேர்தலில் தமிழகம் சாதனை படைக்க வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளை ஐந்தாண்டுகளாக பா.ஜ.க அரசு தீர்க்க முயற்சி செய்யவில்லை. காஷ்மீரி மக்களை தனிமைப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. எல்லை தாண்டி துல்லிய தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க கூறுகிறது. அதற்குப் பிறகுதான் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேலைவாய்ப்பை உறுதி செய்வதில், கல்வியை உறுதி செய்வதில், சுகாதாரத்தை உறுதி செய்வதில், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை உறுதி செய்வதில், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பா.ஜ.க அரசு தோல்வியடைந்துவிட்டது. மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவான அரசாக இருப்பதுதான் மோடி அரசின்  சாதனை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close