திருவள்ளூரில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த காதலி - மகளிர் ஆணையத்தில் புகார்! | Girl attempt Suicide because of love

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (12/03/2019)

கடைசி தொடர்பு:09:30 (12/03/2019)

திருவள்ளூரில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த காதலி - மகளிர் ஆணையத்தில் புகார்!

விஷம் குடித்த காதலி

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ளது ஆரிக்கப்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் லஷ்மி. இவருடைய மகள் நதியா பத்தாம் வகுப்பு படித்து பாதியிலேயே நின்று விட்டார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரின் மகன் ஜெயபால் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை ஜெயபாலும் நதியாவும் பல இடங்களில் சுற்றித் திரிந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 4 -ம் தேதி ஜெயபாலுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கினர். அதைத் தெரிந்துகொண்ட நதியா தனது காதலன் ஜெயபாலை தனிமையில் சந்தித்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி ஜெயபால் அவரது அப்பா மற்றும் அவரது சித்தப்பா துணையுடன் நதியா வீட்டிற்கு வந்து நதியாவின் பெற்றோர் கண்ணன், லஷ்மி மற்றும் தாத்தா பாட்டி ஆகியோரை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் லஷ்மி புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி

இந்நிலையில் அடுத்த நாள் நதியா தனக்கும் தன் அப்பா அம்மாவுக்கும் நடந்த சோகமான சம்பவத்தை நினைத்து கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சேகண்ணியம் என்கிற கிராமத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பூச்சி மருந்து குடித்த அவர் முட் புதரில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நதியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி, வெங்கல்,  ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையங்கள் என மூன்று காவல் நிலையங்களிலும் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால் மற்றும் அவருடைய அப்பா உறவினர்கள் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 7 -ம் தேதி  தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி அவர்களிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் ஆணையம் உடனடியாக நதியாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்களை கேட்டு அறிந்து போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் இந்த நிலையில் நதியாவின் காதலன் ஜெயபால் மற்றும் அவரது அப்பா எல்லப்பன் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீஸார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் நதியா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்குப் போராடி வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெற்றோர்கள் கவனத்துக்கு: தற்கொலைக்கு முயலும் குழந்தைகள் நமக்குக் காட்டும் அறிகுறிகள் இவைதாம்!

 

 


[X] Close

[X] Close