`நடுரோட்டில் மடக்கிப்பிடித்து அதிரடிச் சோதனை!’ - வேலூரில் ரூ.2 லட்சத்துடன் சிக்கிய சார் பதிவாளர் | Bribe for securities registration; Case on sub Registrar

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:07 (16/03/2019)

`நடுரோட்டில் மடக்கிப்பிடித்து அதிரடிச் சோதனை!’ - வேலூரில் ரூ.2 லட்சத்துடன் சிக்கிய சார் பதிவாளர்

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய புகாரில், பள்ளிகொண்டா சார் பதிவாளரின் காரை நடுரோட்டில் மடக்கிப்பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடியாகச் சோதனை செய்தனர். அதில், கணக்கில் வராத 2 லட்சத்து 26 ஆயிரத்து 800 ரூபாய் கைப்பற்றப்பட்டதால், சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

லஞ்சம் வாங்கிய சிக்கிய சார் பதிவாளர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிகை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர், வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சார் பதிவாளராகப் பணிபுரிந்துவருகிறார். பத்திரப்பதிவுக்கு, மணிகண்டன் லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்தது. இதுபற்றி பலர், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர், மணிகண்டனை ரகசியமாகக் கண்காணித்துவந்தனர். 11-ம் தேதி இரவு, மணிகண்டனிடம் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதற்குள், காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டுக்கு மணிகண்டன் காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

கார்  

இதையறிந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சரவணக்குமார் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி, மற்றொரு விஜயலட்சுமி ஆகியோர் விரைந்துசென்று வாலாஜாபேட்டை டோல்கேட்டில் மணிகண்டனின் காரை மடக்கிப் பிடித்தனர். காரை சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இது, லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக,  மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 


[X] Close

[X] Close