மதிய நேரத்தில் தேர்வு வைப்பது சரிதானா? ஓர் அலசல் #SSLC_Exams | is it fine to have SSLC exams in noon

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:13 (12/03/2019)

மதிய நேரத்தில் தேர்வு வைப்பது சரிதானா? ஓர் அலசல் #SSLC_Exams

தேர்வு

இந்த ஆண்டு 10 -ம் வகுப்பு மாணவர்கள் முதன்முறையாகப் பொதுத்தேர்வு எழுதவிருக்கிறார்கள். அதனால், வழக்கமான தேர்வு பயம் இம்முறை இன்னும் கூடுதலாக இருப்பதற்கே வாய்ப்பு. ஓராண்டாகப் படித்து வந்ததை மதிப்பீடு செய்யும் தேர்வு மேலும், மேல்நிலைக் கல்வியில் என்ன துறை எடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் மதிப்பெண்ணைப் பெறுவதற்கு உரியது என்பதால், பெற்றோரும் ஆசிரியர்களும் கூடுதல் கவனிப்பு தந்து பிள்ளைகளைத் தயார் செய்துவந்திருக்கின்றனர். வழக்கமாக, தேர்வுகள் காலையில்தான் நடைபெறும். இந்த ஆண்டில், மொழிப்பாடங்களுக்கான நான்கு தேர்வுகளும் மதிய நேரத்தில் நடைபெற விருக்கிறது. 11-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறுவதால், இந்த மாற்றம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தால், மாணவர்களுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக இருக்குமா என்று கல்வித்துறையில் செயல்படுபவர்களிடம் கேட்டோம். 

கிருஷ்ணமூர்த்தி ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்: ``கல்விப் போதிப்பதே காலை நேரத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் உலகம் தழுவிய கல்விச் சிந்தனை. அதைத்தான் பல உளவியல் நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். இதுவேதான் பரீட்சை எழுதுவதற்கும் பொருந்தும். காலை நேரத்தேர்வு என்றால், மாணவர்கள் புத்துணர்ச்சியோடு தேர்வை எழுதுவார்கள். அதேநேரம் மதிய நேரம் எனும்போது, உளவியலாகக் கவனம் சிதறுவதும், அதிகரித்து வெயிலும் மாணவர்களின் பர்ஃபாமன்ஸைக் குறைத்துவிடும். இது பற்றி, சில ஆசிரியர்களிடம் பேசியபோது, பப்ளிக் எக்ஸாம் என்பதால் மாணவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்றுதான் சொன்னார்கள்." 

சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு: பள்ளிகளில் காலை, மதியம் தேர்வு வைப்பது வழக்காக நடப்பதுதான் என்றாலும், பொதுத்தேர்வு என்பதால் சற்று யோசிக்க வேண்டும். 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வை இதற்கு காரணமாகச் சொல்வதை ஏற்க முடியாது. முன்கூட்டியே சரியாகத் திட்டமிட்டிருந்தால் இதைத் தவிர்த்திருக்க முடியும். முதலில், நிர்வாக அளவில் சரி செய்திருக்க வேண்டியதைத் தவற விட்டுவிட்டார்கள். 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளின்  மூர்த்திதேர்வுகளைவும் முறையாகத் திட்டமிட்டிருந்தால், காலை நேரத்திலேயே நடத்திவிட முடியும். இடப்பற்றாக்குறை என்றெல்லாம் சொல்ல முடியாது. பல பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு தேர்வுக்கு இடையேயும் ஓய்வு நாள் அவசியம். அந்த நாள்களைப் பிரித்து, பயன்படுத்தியிருக்கலாம். இப்போதைய வெப்பநிலையைப் பார்த்தால், தமிழகம் முழுவதுமே வெயில் நிலை அதிகரித்து வருவதைச் செய்தித்தாள்கள் வழியே பார்க்க முடிகிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் செல்வதிலும் மிகவும் சீக்கிரமாகச் சோர்வடைந்துவிடுவார்கள். அந்தச் சோர்வு தேர்வு எழுதுவதிலும் வெளிப்படும். பொதுவாகவே காலை நேரம்தான் தேர்வு எழுதுவதற்கு உகந்தது. எனவே, தேர்வு நேரம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதைக் குறித்து இனியாவது உரையாடி, அடுத்தடுத்த ஆண்டுகளில் இதுபோல செய்யாதிருக்க வேண்டும் கல்வித் துறை. 

10-ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாமைப் பொறுத்தவரை இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். 12-ம் வகுப்பில் மொழிப்பாடங்களை இரண்டு தாள்களிலிருந்து ஒரே தாளாக மாற்றி அமைத்துவிட்டனர். அந்த முறை 10-ம் வகுப்புக்கும் தொடர்ந்தால் பல மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதைக் கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு இப்படிச் செய்திருந்தால்கூட இரண்டு தேர்வுகள் குறைந்திருக்கும்." 

மாணவர்களின் உடல் மற்றும் உளவியலையும் கவனத்தில் கொண்டு தேர்வு தேதி, நேரத்தை முடிவு செய்வது அவசியம். 
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close