‘எங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க-விடம் தெரிவித்துவிட்டோம்’ - கூட்டணிகுறித்து ஜி.கே. வாசன் | GK Vasan’s party talks to join the AIADMK - BJP alliance for the Lok Sabha polls

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:10 (16/03/2019)

‘எங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க-விடம் தெரிவித்துவிட்டோம்’ - கூட்டணிகுறித்து ஜி.கே. வாசன்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரம்காட்டிவருகின்றன. 

பழனிசாமி, ஸ்டாலின்

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் தங்களின் கூட்டணியை முடிவுசெய்யவில்லை. இது தொடர்பாக, இன்று ஆழ்வார் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், “ தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என்று தமிழகத்தில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. மக்கள் விரும்பும் மரியாதை கட்சி என்பதால், எங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க-வின் தேர்தல் குழு தொடர்ந்து ஆலோசனைசெய்துவருகிறது. தேர்தல் குழுவிடம் எங்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துள்ளோம். இறுதி வடிவம் கிடைத்த பிறகு, இன்னும் ஓரிரு நாள்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும். 

வாசன்

எந்த தேசியத்திற்கும் நான் இடம்கொடுக்க விரும்பவில்லை. கட்சியின் நலன், நாட்டின் நலன், தமிழக வளர்ச்சி இவற்றில் அக்கரை கொண்டுதான் பேசியுள்ளேன். தேர்தல் சம்பந்தமாக, கூட்டணி சம்பந்தமாக நேரடி பேச்சுவார்த்தை இருந்தால், அதிகாரபூர்வ அறிவிப்பு நிச்சயம் வெளிவரும்.  அ.தி.மு.க-வின் தேர்தல் குழு மற்றும் த.மா.கா இவற்றிற்கு இடையேதான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் கூட்டணியை உறுதிசெய்ய வேண்டும்; ஒருமித்த கருத்து ஏற்படவேண்டும்;  அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே தேர்தல், வேட்பாளர், இடம், சின்னம் இவற்றை அந்தந்த நேரத்துக்கு ஏற்றவாறு த.மா.கா அறிவிக்கும்'’ என்றார். 


[X] Close

[X] Close