நெற்றியில் நாமம், கையில் சங்கு! - 9-வது நாளாகப் போராடும் விவசாயிகள் | Farmer protest in namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (12/03/2019)

நெற்றியில் நாமம், கையில் சங்கு! - 9-வது நாளாகப் போராடும் விவசாயிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் 9-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகள்

'பவர்கிரிட் நிறுவனம்',  விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குப் பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளைப் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கெனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு, உயர்மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகை வழங்கிட வலியுறுத்தியும், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கைகளில் கறுப்புக்கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்மின் கோபுர மின்கம்பிகள், கீழே எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் போல எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர். இதனைத் தொடர்ந்து 9-வது நாளாக நெற்றியில் நாமமிட்டும், சங்கு ஊதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close