சி.பி.சி.ஐ.டி வேண்டாம்; எஸ்.ஐ.டி விசாரிக்கட்டும்! - பொள்ளாச்சி விவகாரத்தில் தகிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் | need separate commission in Pollachi abuse case

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:15:00 (12/03/2019)

சி.பி.சி.ஐ.டி வேண்டாம்; எஸ்.ஐ.டி விசாரிக்கட்டும்! - பொள்ளாச்சி விவகாரத்தில் தகிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்

பொள்ளாச்சியில், பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, பணம்பறித்த கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.  பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரத்தில், கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக மக்கள் ஒறுமித்த கருத்து தெரிவித்துவருகின்றனர். 

பொள்ளாச்சி வழக்கு

இதுதொடர்பாக, ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவையின் அகில இந்திய பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மனோகரனிடம் பேசினோம். ``தமிழகம் முழுவதும் கோபம், இயலாமை, வெறுப்பு, துயரம், பதற்றம் என ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு உணர்ச்சியும் மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. காரணம், பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் பெண்களை 2012 -ம் ஆண்டு முதல் சிலர் முகநூல் வாட்ஸ்அப் எனத் திட்டம் போட்டு ஒவ்வொரு பெண்ணையும் அவர்கள் வலையில் விழவைத்து, அதை வைத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மனோகர்

பணம் இருக்கும் பெண்களிடம் கோடிக் கணக்கில் பணம் பறித்துள்ளனர். ஏழைப் பெண்களை மிரட்டி, அரசியல் பிரமுகர்களின் இச்சைக்கு அடிபணிய வைத்துள்ளனர்.  கோவையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்துதான் இக்கொடூரங்களைச் செய்துள்ளனர். சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ்குமார், ஃபைனான்ஸ் மணிகண்டன் உள்ளிட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். புகார் கொடுத்தவரான,  பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை  நாகராஜ் உள்ளிட்ட சிலர் தாக்கியுள்ளனர். இந்தப் புகாருக்காக நாகராஜ், பாபு ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ளார்கள் . பின்னர், முக்கியக்  குற்றவாளி திருநாவுக்கரசு உட்பட  நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசு பின் புலத்தில் பல பேருக்கு இதில் தொடர்பு உண்டு என்று பேசிய ஆடியோவும் வீடியோவும், கைதுக்கு முன்பே வெளிவந்தது. ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நாகராஜ் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில், பல அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கோவை மாவட்ட காவல் துறை எஸ்.பி பாண்டியராஜன் தனது பத்திரிகையாளர் சந்திப்பில், நான்கு பேர் தவிர்த்து யாரும் குற்றவாளி இல்லை என்று கூறியுள்ளார். இவர்கள், ஒட்டுமொத்தமாக மூடி மறைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல்வாதிகள், அதுவும் ஆளும் கட்சிக்காரர்களின் சட்டமன்ற உறுப்பினர் பெயர் வரை அடிபடுவதால், சிபிசிஐடி விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ விசாரிக்கப்பட வாய்ப்பில்லை. எனவே,  இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள்  தலைமையில் சிறப்பு புலன்விசாரணை அமைப்பை அமைக்க வேண்டும். சிறப்பு நுண்ணறிவு பிரிவு இந்த வழக்கை விசாரித்தால்தான் உண்மை வெளியில் வரும்’ எனக் கூறினார். 


[X] Close

[X] Close