`என் மகன் எந்தத் தப்பும் பண்ணல!' - பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்தில் ஆவேசப்பட்ட திருநாவுக்கரசின் தாய் | Pollachi case: Bail refused for Thirunavukarasu

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (12/03/2019)

கடைசி தொடர்பு:16:01 (12/03/2019)

`என் மகன் எந்தத் தப்பும் பண்ணல!' - பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்தில் ஆவேசப்பட்ட திருநாவுக்கரசின் தாய்

பொள்ளாச்சியில், பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால், அவரது தாயார் ஆவேசம் அடைந்தார்.

திருநாவுக்கரசு

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை ஆபாசமாகப் படம் எடுத்து, கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்கக் கோரி,  கடந்த 6-ம் தேதி பொள்ளாச்சி முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், அவரது தாயார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆறுமுகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் தரப்பிலும் அவரது தாயார் தரப்பிலும் வாதங்களை முன்வைத்தனர். அதையடுத்து, 'கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திருநாவுக்கரசிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், ஜாமீன் வழங்கினால் திருநாவுக்கரசு வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் விட்டு வெளியே வந்த அவரது தாயார் ஆவேசமடைந்தார்.

திருநாவுக்கரசு தாய்

அங்கிருந்த வழக்கறிஞர் மற்றும் பொதுமக்களிடம் ஆவேசமாகப் பேசினார். "எனது மகன் திருநாவுக்கரசு எந்தத் தப்பும் செய்யல. அவனைக் கைதுசெய்து துன்புறுத்திவருகின்றனர்" என்றார் ஆவேசமாக. இதனால், நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


[X] Close

[X] Close