பொள்ளாச்சி விவகாரம் - வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு | Police DGP orders to change Pollachi case to CBCID

வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (12/03/2019)

கடைசி தொடர்பு:14:23 (12/03/2019)

பொள்ளாச்சி விவகாரம் - வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்திலும் தமிழக மக்களின் மனதில் நிறைந்துள்ள ஒரு விஷயம் பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.

பொள்ளாச்சி பயங்கரம்

200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த வழக்கின் ஒவ்வொரு தகவலும் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. இன்றைய தேதிக்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் ஏராளமாக உள்ளனர். அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி பல தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். 

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருந்தும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குக் கீழ் தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் எனப் பல கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன். இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக இது கருதப்படுகிறது. வழக்குத் தொடர்பாக தற்போது காவல்துறையிடம் உள்ள அனைத்துக் கோப்புகளும் சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படும். மேலும், இதை விசாரிக்க ஒரு எஸ்.பி நியமிக்கப்படுவார். இது பாலியல் தொடர்பான வழக்கு என்பதால் பெண் எஸ்.பி நியமிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தங்களின் விசாரணையைத் தொடங்கவுள்ளனர். 


[X] Close

[X] Close