`வேட்பாளர் யாருன்னு முடிவு பண்ணல, அதற்குள்ளே ஆரம்பிச்சிட்டீங்களா?'- கடுகடுத்த எடப்பாடி | 'Are you ready to decide on the candidate, do not you start it?' - The gossiping of the Perambalur executives

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:13 (16/03/2019)

`வேட்பாளர் யாருன்னு முடிவு பண்ணல, அதற்குள்ளே ஆரம்பிச்சிட்டீங்களா?'- கடுகடுத்த எடப்பாடி

வேட்பாளரின் பெயர்களை அறிவிக்கும் முன்பே முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த சிவபதிக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களே எடப்பாடியிடம் மனு அளித்துள்ளனர். `வேட்பாளர் யாரென்றுகூட முடிவு செய்யவில்லை. அதற்குள்ளே உங்க கூத்து ஆரம்பிச்சிட்டீங்களான்னு' தலையில் அடித்துக்கொண்டாராம் முதல்வர் எடப்பாடி.

                                                         எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல்களுக்குப் பெயர்போன தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி. இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி சீட்டு கேட்டு தலைமையை வற்புறுத்தி வருகிறார். அத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாமா, மாப்பிள்ளை என்று கூப்பிடும் அளவுக்கு நெருக்கம் எங்களுக்குள் உள்ளது. எப்படியும் எனக்குத்தான் சீட் உறுதி என்று தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் பேசி வருவதோடு வேலை தொடங்கியிருக்கிறார்.

                                                                  சிவபதி

இந்த நிலையில், தலைமையிலிருந்து வேட்பாளரை அறிவிக்கும் முன்பே பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் என்.ஆர்.சிவபதிக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த உப்பிலியாபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி செல்வராஜ், துறையூர் சேனை.செல்வம், முசிறி ராஜமாணிக்கம் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக முதல்வர் எடப்பாடியை சந்தித்து, ``எக்காரணத்தைக் கொண்டும் சிவபதிக்கு எம்.பி சீட் கொடுத்துவிட வேண்டாம். அவர் தொகுதிக்குள் சென்றால் மக்கள் யாரும் ஓட்டுப் போடமாட்டார்கள்.

                                                      

தொகுதிக்குள் நிறைய கெட்டப்பெயர் உள்ளது. அவர் நின்றால் தோற்பது நிச்சயம். அதேபோல மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்துப் பல காய்களை நகர்த்தி வருகிறார். அவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அண்ணன், தம்பி ஆட்டத்தைப் பார்த்து ஜெயலலிதா அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கினார். எக்காரணத்தைக் கொண்டும் ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்டுவிடாதீர்கள்" என்று எடப்பாடியிடம் எழுதிக்கொடுத்து வந்துள்ளனராம். இச்செயல் சிவபதிக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களால் எம்.பி, கனவு கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் போர்க்கொடி தூக்கிய அனைத்து ஒன்றியச் செயலாளர்களையும் இரவு பகலாகச் சந்தித்துப் பேசி வருகிறாராம். இச்செயலால் முதல்வர் கடும் அப்செட்டில் உள்ளாராம்.


[X] Close

[X] Close