வாகனச் சோதனையில் சிக்கிய லட்சங்கள் !- தொடரும் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி | lok sabha election 2019 - Lakhs of amount seized in Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:14 (16/03/2019)

வாகனச் சோதனையில் சிக்கிய லட்சங்கள் !- தொடரும் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி

உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 12,76,500 ரூபாயைத் தேர்தல் கண்காணிப்புக் குழு பறிமுதல் செய்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு கூட்டுறவு சார்பதிவாளர் சசி குமார் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

                                               

அப்போது கும்பகோணத்திலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி 12,76,500 ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் 12,76,500 ரூபாயைப் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உடையார்பாளையம் ஆர்,டி,ஓ ஜோதி வசம் ஒப்படைத்தனர்.

                                                    

பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தை வாங்கிச்செல்லவும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் வாக்காளர்களுக்குக் கொடுப்பதாக எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


[X] Close

[X] Close