`குற்றப்பின்னணியை விளம்பரமாக வெளியிடணும்!'- வேட்பாளர்களுக்கு `செக்' வைக்கும் தேர்தல் ஆணையம் | Chief Election Officer Satya Prata Sahu Check to Candidates

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:14 (16/03/2019)

`குற்றப்பின்னணியை விளம்பரமாக வெளியிடணும்!'- வேட்பாளர்களுக்கு `செக்' வைக்கும் தேர்தல் ஆணையம்

``தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவராக இருந்தால் அவர்கள் செய்த குற்றத்தைச் செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட வேண்டும்'' என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். ``தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில்  ரூ.57,12,000 பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் 2653 சுவர் ஓவியங்கள், 5337 போஸ்டர்கள் 1561 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. மதுரை விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சித்திரை திருவிழாவுக்கு எத்தனை பேர் வருவார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.

சத்யபிரதா சாகு

 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் 2,000 ரூபாய் திட்டம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை சரவணன் வாபஸ் பெற்றாலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைதான் பின்பற்றுவோம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குற்றப் பின்னணி உடையவராக இருந்தால், அவர்கள் செய்த குற்றத்தை செய்திதாள்களில் அவர்களே விளம்பரமாக வெளியிட வேண்டும். மார்ச் 15-ம் தேதி பாதுகாப்பு பணிகளுக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படை தமிழகத்துக்கு வரவுள்ளது. தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இலவசங்கள் அறிவிக்க தேர்தல் ஆணையம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் விளம்பரம் வெளியிட்டால் போதும், மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும்'' என்று கூறினார் சத்யபிரதா சாகு.


[X] Close

[X] Close