'நாளை தமிழகம் வருகிறார் ராகுல்!'- கூட்டணிக் கட்சிகளுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு | Rahul Visit to Tamilnadu for election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:14 (16/03/2019)

'நாளை தமிழகம் வருகிறார் ராகுல்!'- கூட்டணிக் கட்சிகளுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கூட்டணிகளுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தை நாகர்கோவிலில் இருந்து துவங்குகிறார். 

ராகுல்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் ஆட்சிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரை, பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். முதலில் சென்னை வரும் ராகுல், அங்கு ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகிறார். அதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் புறப்படுகிறார்.

                                                                              ராகுல்
நாகர்கோவிலில் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில்,  தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.


[X] Close

[X] Close