பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் - இந்திய மாணவர் பேரவை அமைப்பினர் கோரிக்கை | Pollachi sexual assault case Students Protest

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (12/03/2019)

கடைசி தொடர்பு:22:20 (12/03/2019)

பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் - இந்திய மாணவர் பேரவை அமைப்பினர் கோரிக்கை

``பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் பேரவையினர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.’’

பொள்ளாச்சி ஆபாச வீடியோ

 

பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்களைக் காதல் என்ற போர்வையில் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்த விவகாரம், தமிழக மக்களை பெரும் அதி்ர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் குற்றவாளிகள் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் அரசியல் புள்ளிகளின் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதையடுத்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இதற்குக் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மாணவர் பேரவை அமைப்பினர், இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்துப் பேசிய இந்திய மாணவர் பேரவை அமைப்பினர், ``பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டுத் தர வேண்டும். மேலும், குற்றவாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close