ஜெயலலிதா மணல் சிற்பம், ராகுல் காந்தி வரவேற்பு பதாகை அகற்றம் நாகர்கோவிலில் அதிரடித்த அதிகாரிகள்! | Election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (16/03/2019)

ஜெயலலிதா மணல் சிற்பம், ராகுல் காந்தி வரவேற்பு பதாகை அகற்றம் நாகர்கோவிலில் அதிரடித்த அதிகாரிகள்!

நாகர்கோவிலில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணல் சிற்பம் மற்றும் ராகுல் காந்தி வரவேற்பு பதாகைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணல் சிற்பம்


நாடாளுமன்றத் தேர்தல் தேதி கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மாலை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். 

பேனர் அகற்றம்

தேர்தல் பிரசாரத்துக்காக வரும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை வரவேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் பகுதியில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உள்ளிட்டவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஜெ.மணல் சிற்பம்

மேலும், வடசேரி எம்.ஜி.ஆர். சிலை அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மணல் சிற்பத்தையும் அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முறையான அனுமதி பெறாமல் மணல் சிற்பம் வைக்கப்பட்டிருந்ததால் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


[X] Close

[X] Close