10 போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்! - தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க மனு! | 10 police officers to change! - DMK petition to the Election Commission

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (12/03/2019)

கடைசி தொடர்பு:20:55 (12/03/2019)

10 போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்! - தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க மனு!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 10 போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறது தி.மு.க.

போலீஸ்  பட்டியல்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஆளும் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்றும் ஒரு சார்புடைய மனநிலையில் வேலை செய்யும் அதிகாரிகள் என்றும் தி.மு.க சில போலீஸ் அதிகாரிகளைப் பட்டியலிட்டு, அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க சார்பில்  தி.மு.க அமைப்புச் செயலாளரும், எம்.பி-யுமான ஆர்.எஸ். பாரதி, மனு அளித்திருக்கிறார்.

                                                                                  

அதில் டி.ஜி.பி ராஜேந்திரன், ஐ.பி.எஸ் சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, கண்ணன் உட்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

இதுகுறித்து ஆர்.எஸ். பாரதியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் காவல்துறை அதிகாரிகள் மீதும் பகை கிடையாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ஒரு காவல்துறை அதிகாரி ஒரே பணியிடத்தில் நீண்டகாலம் பணியில் இருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் 5 வருடங்கள் வரை, அதே ஊரிலேயே பதவி உயர்வு பெற்றும் பணியில் இருக்கிறார்கள்.

                                                                            rs bharathi

அமைச்சர்களுக்கு வேண்டிய சிலர், ஒரே காவல்நிலையத்திலேயே வேலை செய்துவருகின்றனர். அதனால்தான் அவர்களைப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறோம். அவர்களும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்'' என்றார்.


[X] Close

[X] Close