பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! | Surprise by old students who to general exam writing students!

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (13/03/2019)

கடைசி தொடர்பு:08:15 (13/03/2019)

பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வழங்கி வாழ்த்தினர்.

மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தாந்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்றுவருகின்றனர். பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த அவர்கள், பள்ளி நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்.
 

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 -ம் தேதி முதல்  தொடங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர். மேலும், தேர்வில் வெற்றிபெற மாணவர்களை வாழ்த்தினர்.

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறும்போது, ``வெளியூர், வெளிநாடுகளில் உள்ள பள்ளி நண்பர்கள் சிலரை வாட்ஸ்அப் குழு மூலம் ஒருங்கிணைத்தோம். அந்தக் குழுவில், அரட்டை அடிப்பது மட்டுமின்றி படித்து உயர்ந்த நிலையை அடைய உதவிய எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என நினைத்தோம். இதுகுறித்து பள்ளி நண்பர்களுடன் வாட்ஸ்அப் குரூப்பில் விவாதித்தோம். நிதி திரட்டினோம். தற்போது முதல்கட்டமாக,  மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களைக் கொடுத்துள்ளோம். முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவராக நிதி கொடுத்துவருகின்றனர். தொடர்ந்து, நண்பர்கள் குழு மூலம் அடுத்தடுத்து கல்விச்சீர் உள்ளிட்ட பொருள்களையும், நாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளோம். இதேபோல, ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே எங்களது ஆசை" என்றனர்.


[X] Close

[X] Close