தமிழகம் வந்த ராகுல் காந்தி! - மும்பை, டெல்லியில் ட்ரெண்டான #Gobackrahul | Go back rahul trending in mumbai

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:23 (16/03/2019)

தமிழகம் வந்த ராகுல் காந்தி! - மும்பை, டெல்லியில் ட்ரெண்டான #Gobackrahul

இந்தியாவின் 17- வது மக்களவைக்கான நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள், தொகுதி அறிவிப்பு, பிரசாரம் எனப் படு பிஸியாக உள்ளனர் அரசியல் தலைவர்கள்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இன்று காலை 11 மணியளவில் சென்னை வந்த அவர், சென்னையில் நடக்கும் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர், பிற்பகல் மூன்று மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாட உள்ளார். அவருடன் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

தமிழகம் வந்த ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து Gobackrahul என்ற ஹாஸ்டாக் ரெண்டாகியது. இது டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழகம் வரும் ராகுலுக்கு மும்பை, டெல்லியில் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

முன்னதாக, தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு வந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக Gobackmodi என்ற ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆனது. அதேபோல், தற்போதும் ராகுல் வருகைக்கு ட்ரெண்ட் ஆகிவருகிறது. 


[X] Close

[X] Close