நடிகர் விஷால் - அனிஷா நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு! | Actor Vishal's engagement date has been announced!

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/03/2019)

கடைசி தொடர்பு:16:20 (13/03/2019)

நடிகர் விஷால் - அனிஷா நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு!

நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலின் திருமணம் குறித்து இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று செய்திகள் வெளியானது. அதாவது, விஷால் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்த கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி தெரிவித்திருந்தார்.

விஷால்

அதே நாளில் விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.  இந்த நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் வருகிற மார்ச் 16-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. 

Vishal

பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டி, அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். படிப்பு முடிந்து இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், விஜய் தேவரைக்கொண்டா நடித்த `பெல்லி சூப்லு', `அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close