எமோஷன், ஆக்‌ஷன், காமெடி!- கார்த்தி- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படம் | Karthi - Rashmika Mandhana's next movie shooting has started!

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (13/03/2019)

எமோஷன், ஆக்‌ஷன், காமெடி!- கார்த்தி- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படம்

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் எனும் தகவல் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியானது.

கார்த்தி

இவர் ஏற்கெனவே தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' எனும் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் ராஷ்மிகாவுக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாண்டியராஜ் இயக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ராஷ்மிகாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

Karthi

இந்த நிலையில், கார்த்தி- ராஷ்மிகா நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாக்கப்பட்டுவருகிறது. தவிர, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும்  'கைதி' படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இல்லை என்பது கூடுதல் தகவல். 


[X] Close

[X] Close