`கூட்டணிக்குப் பிறகாவது இதை நீக்கியிருக்கலாம்!'- வருந்தும் அ.தி.மு.க, சர்ச்சையில் பா.ம.க இணையதளம் | ‘CM AND DEPUTY CM MUST RESIGN : PMK’

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:26 (16/03/2019)

`கூட்டணிக்குப் பிறகாவது இதை நீக்கியிருக்கலாம்!'- வருந்தும் அ.தி.மு.க, சர்ச்சையில் பா.ம.க இணையதளம்

பா.ம.கவின் இணையதள பக்கத்தில் உள்ள விமர்சனத்தால் அ.தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பா ம க

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரம்காட்டிவருகின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தது குறித்து பா.ம.க மீது விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் அந்தக் கட்சிக்கு எதிராக ட்ரோல்கள் வெளியாக ஆரம்பித்தன. 

இணையதள பக்கத்தில் உள்ள விமர்சனம்

குறிப்பாக முதல்வர், துணை முதல்வர் உட்பட அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த ராமதாஸ், அதுகுறித்து புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார். அந்தவகையில் கூட்டணி சேருவதற்கு முன்பு பா.ம.க தனது இணையதள பக்கத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பதவி விலக வேண்டும் எனப் பதிவிட்டிருந்தனர். பா.ம.க-வின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் நுழைந்தவுடனே ‘CM AND DEPUTY CM MUST RESIGN : PMK’ என்று வருகிறது. கூட்டணிக்குச் சேர்வதற்கு முன் விமர்சனங்களை முன்வைத்த பா.ம.க கூட்டணி பிறகு இதை நீக்கியிருக்கலாம் என அ.தி.மு.க நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வலைதளங்களிலும் இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close