`மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்!' - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதுல்யா ஆறுதல் | Actress athulya ravi motivational speech video for pollachi girls

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/03/2019)

கடைசி தொடர்பு:10:31 (14/03/2019)

`மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்!' - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதுல்யா ஆறுதல்

அதுல்யா ரவி

பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை அதுல்யா ரவி வீடியோவில், `பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமா இருக்க வேண்டும். இனிதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்' என ஆறுதலாகப் பேசிப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அதுல்யா பேசியுள்ளதாவது, 

``இதைவிட இன்னும் நீங்கள் தைரியமா இருக்கணும். இந்த விஷயத்தைத் தாண்டி வரணும். எதோ ஒரு தெருப் பொறுக்கி நாய்கள் பண்ற விஷயத்தால், நாம நல்லப் பசங்களையும் தப்பா பார்க்க வேண்டியிருக்கு. மத்த நாட்டில் இதுமாதிரி விஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவாங்க. அந்த மாதிரி செய்தி வரலனா இன்னும் அந்த மாதிரி விஷயங்களைப் பண்ணிக்கொண்டேதான் இருப்பாங்க." 

``இந்த சென்சிட்டிவான விஷயத்தை அரசியலா மட்டும் மாத்திடாதீங்க ப்ளீஸ். காவல்துறையோ, கோர்ட்டோ யாராக இருந்தாலும், இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டுடாதீங்க."

அதுல்யா ரவி

``யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாதுதான். அதேநேரம் நீங்க நம்புற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு வருஷம்கூட டைம் எடுத்துக்கோங்க அவங்களை சந்திக்க. அதேபோல, சந்திப்பதற்குத் தனியாகவே போங்க. அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாகப் போவதைத் தவிர்த்திடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். 

அதேநேரம் உங்கள் பேக்கில் எதாவது ஒரு சேஃப்டி பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது எனக்குப் பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கிறேன். நீங்க பயப்படுற தருணத்தில் இல்லை. அவனுங்க பயப்படவேண்டும்.

அதுல்யா ரவி

நிறைய பேர் கமெண்டில் `பிடித்துதானே போனே..'னு கேட்கிறார்கள். எந்தப் பெண்ணும் நம்பித்தான் போவாள். அதேபோல வீடியோ எடுத்து மிரட்டும் அளவுக்குப் போவாங்கனு எதிர்பார்த்தும் போகமாட்டாள். அந்த மாதிரி கமெண்ட் போடுபவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள். நம்மை மிரட்டுவதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள். எனவே, எதற்காகவும் பயப்படாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்'' என பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பேசியிருக்கிறார் அதுல்யா ரவி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close