உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க நடைப்பயணம் - பெண்கள் கூட்டமைப்பு! #ArrestPollachiRapists | rally for justice in pollachi rape case

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (13/03/2019)

கடைசி தொடர்பு:12:41 (14/03/2019)

உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க நடைப்பயணம் - பெண்கள் கூட்டமைப்பு! #ArrestPollachiRapists

குற்றவாளி

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் துயரத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்களில் ஒரு பெண், காவல் துறையில் புகார் அளித்ததும், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், புகார் அளித்தவர் பற்றிய தகவல்களை, காவல் துறை வெளியிட்டுவிட்டதால், புகார் அளித்தவர் வீட்டுக்குச் சென்று சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராடி ஈஸ்வரி வருகின்றனர். ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த கட்சிகள், இயக்கங்கள் திட்டமிடுகின்றன. இந்த நிலையில், பெண்கள் கூட்டமைப்பு சார்பாக, நடைப்பயணம் ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, அக்கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் செயலாளர் ஈஸ்வரியிடம் பேசினேன். 

``வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு பெரும் துயரம் பொள்ளாச்சியில் நடந்தது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் அனைவர் மீதும் தீவிரமான நடவடிக்கையை, காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் என்பது அவசியம். இதை வலியுறுத்தியே நாளை (மார்ச் 14) மாலை,  பெண்கள் கூட்டமைப்பு சார்பாகவும், நடைப்பயணம் ஒன்றைச் சென்னையில் நடத்தவிருக்கிறோம். ஸ்பென்ஸர் பிளாஸாவில் தொடங்கும் நடைப்பயணம், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பதுடன் முடிவடையும்.  தோழர், சரஸ்வதி (பி.யூ.சி.எல்), திருநங்கை சுதா, ஜெரினா ஜமால் (வெல் ஃபேர் பார்ட்டி) , சுதா (தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்) உள்ளிட்டோர் முன்னெடுக்கும் பயணம் இது. நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்கிறார்.


[X] Close

[X] Close