`துப்பாக்கிகளை ஒப்படையுங்கள்; மீறினால் பறிமுதல் செய்யப்படும்!' - தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை | Submit guns thanjai collector order

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (16/03/2019)

`துப்பாக்கிகளை ஒப்படையுங்கள்; மீறினால் பறிமுதல் செய்யப்படும்!' - தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

``தஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் தனிநபர்கள், அவைகளை ஒப்படைக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார். துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுத்தால், அவைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என எச்சரித்துள்ளார்.

துப்பாக்கி

இந்தியாவில் தேர்தல் நேரங்களில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, தனிநபர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் மிகவும் முக்கியமான விதிமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை நாடாளுமன்றம் மற்றும் தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவைகளை அருகில் உள்ள காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதை மீறினால் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமமும் ரத்து செய்யப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அண்ணாதுரை அறிவித்துள்ளார். தற்பொழுது ஒப்படைக்கப்படும் துப்பாக்கிகள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு வாரம் கழித்து திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close