பொது நிகழ்வுகளில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை | Avoid unnecessary ideas in public events! Alangudi MLA bail

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/03/2019)

கடைசி தொடர்பு:06:30 (14/03/2019)

பொது நிகழ்வுகளில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச சைக்கிள்களை முன் கூட்டியே வழங்கி, ஆசிரியர்களைப் பணி செய்யவிடவில்லை என்றும், தவறான தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகவும், ஆலங்குடி எம்.எல்.ஏ மீது தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கி உள்ளது. 

மேல்நிலைப் பள்ளி

ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்காக வழங்கப்படவிருந்த அரசின் இலவச சைக்கிள்களை முன் கூட்டியே மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, தவறான விவரங்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆலங்குடி எம்எல்ஏ

என் மீது எந்தத் தவறும் இல்லாத நிலையில், ஆளும் கட்சியினரால் திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ``இதுபோன்ற பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது தேவையற்ற கருத்துகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" எனக்கூறி எம்.எல்.ஏ-க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


[X] Close

[X] Close