``நான் அமைச்சராக இருந்திருந்தால்...” - பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ காட்டம்! | Madurai MLA Pazhanivel press meet

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (14/03/2019)

கடைசி தொடர்பு:10:04 (14/03/2019)

``நான் அமைச்சராக இருந்திருந்தால்...” - பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ காட்டம்!

 

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அப்போது, ``தேர்தல் ஆணைய அதிகாரிகள் எல்லாவற்றையும் சரியாக செய்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் தான் செயல்படுகின்றனர். மதுரையில் சித்திரை திருவிழாவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். அந்த சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலை வைத்துள்ளனர். மக்கள் ஓட்டுபோட செல்வார்களா ? திருவிழாவுக்குச் செல்வார்களா? மக்கள் மிகவும் அவதிப்படுவார்கள். வாக்குப்பதிவு குறைய வாய்ப்புகள் உள்ளது. இது இந்துக்களுக்கு விரோதமான செயல். இங்கே உள்ள தமிழக தேர்தல் அதிகாரிக்கு இங்கே நடக்கும் நிகழ்வுகள் பற்றி தெரியாதா?

தியாகராஜன்

 மதுரை போலீஸ் கமிஷனர் இரு நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு தர முடியாது என்று தெரிவித்துவிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியர் தன்னை கடவுள் போல நினைத்துக்கொண்டு இரு நிகழ்ச்சிகளையும் நடத்திவிடலாம் என தெரிவித்துள்ளார். தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பான  வழக்கு நீதி மன்றத்துக்குச் சென்றுள்ளது. இதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஆனால், ஐனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிற காரணத்தினால் நானும் இந்த வழக்கில் இணைவேன். பொள்ளாச்சி பாலியல் தொடர்பான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாக இருந்தோம். ஆனால், கோவை எஸ்.பி சொல்லிவிட்டார். இது வேதனைக்குறிய செயல். ஈ.பி.எஸ் இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றார். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதா, நான் அமைச்சராக இருந்திருந்தால் இந்த விஷயத்துக்காக பதவியை ராஜினாமா செய்திருப்பேன்" என மிகவும் காட்டமாக தெரிவித்தார்.


[X] Close

[X] Close