``திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் கோட்டை” - ராகுல் கூட்டத்தில் தொண்டர்கள் கோஷம் | Congress followers asked to give tirunelveli constituency

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (16/03/2019)

``திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் கோட்டை” - ராகுல் கூட்டத்தில் தொண்டர்கள் கோஷம்

நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டதில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தொண்டர்கள் பதாகை உயர்த்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி கூட்டம்


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்து. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். இந்தக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் பலர் கையில் ஒரு பதாகைகளை உயர்த்திக் காட்டினர். அதில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. அந்தப் பதாகையை மேடையை நோக்கிக் காட்டியபடி `திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸு க்கு ஒதுக்க வேண்டும். திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் கோட்டை' எனத் தொண்டர்கள் முழங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அங்கு சென்று தொண்டர்களை சமாதானப்படுத்தினர். கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தொண்டர்களின் கோஷம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close