`ஹாய் ராகுல்'னு கூப்பிட்டதும் ஆச்சர்யமாக இருந்தது'' கல்லூரி மாணவிகள் பூரிப்பு | Interview With Azra Kadhar Who asked question to rahul in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (14/03/2019)

கடைசி தொடர்பு:17:43 (14/03/2019)

`ஹாய் ராகுல்'னு கூப்பிட்டதும் ஆச்சர்யமாக இருந்தது'' கல்லூரி மாணவிகள் பூரிப்பு

தேர்தல் நேரம் நெருங்கிவிட்ட வேளையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்றைய தினம் தமிழகத்துக்கு வருகை புரிந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவர்களிடையே பேசினார். ரொம்பவே கூலாக தனது கலந்துரையாடலைத் தொடங்கினார் ராகுல் காந்தி.

 

 

``எளிமையான கேள்விகளாக இல்லாமல், கடினமான கேள்விகளைக் கேளுங்கள்" என சிரித்தபடியே கேள்விகளை எதிர்கொண்டார். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் ராகுலை சார் என்று கூப்பிட, `` ராகுல் என நீங்கள் என்னை அழைக்கலாம்" என்றார். உடனே அந்தப் பெண் `ஹாய் ராகுல்' என அழைத்தார். அந்த வீடியோ பட்டி தொட்டி எங்கும் வைரலானது. ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளரை பெயர் சொல்லி அழைத்ததைப் பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.  அந்த நிகழ்ச்சியை பற்றி கல்லூரி மாணவிகளிடம் விசாரித்த போது

 

ராகுல்

``ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் அந்தப் பெண்  படித்து வருகிறார்.  முதல் கேள்வியை அந்தப் பொண்ணுதான் கேட்டாங்க. அவங்க கேட்டப்போ  பதட்டமாதான் இருந்தாங்க. ஆனா அவங்களைக் கூல் பண்ற மாதிரி ராகுல் காந்தி  'சார்' னுலாம் கூப்பிடாதிங்கனு சொல்லிட்டாரு. அதுக்கப்புறம்தான் அவங்க `ஹாய் ராகுல்'னு சொன்னாங்க.  அவர் சொன்ன பதில் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதா இருந்தது. அந்த வீடியோ இவ்ளோ வைரல் ஆகும்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. அந்தப் பொண்ணு காலேஜ்ல  ஸ்டேஜ் டிராமலலாம் நடிச்சுருக்காங்க" என்றனர்.


[X] Close

[X] Close