நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி - விரைவில் தேர்வுகளை முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு | School Education Instruction to schools that Exams should be completed by April 12th

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:31 (16/03/2019)

நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி - விரைவில் தேர்வுகளை முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

நாடு முழுவதும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்வு

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்துவது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் தற்போது 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இவை அல்லாத மற்ற வகுப்புகளுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதிவரை தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பள்ளியின் வேலை நாள்கள் மற்றும் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளது. மேலும் வேலை இழப்பு ஏற்படும் நாள்களைச் சரிசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close