மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்... ஈரோட்டில் ஒருநாள் பயிற்சி வகுப்பு ! | Mutual fund awareness program at Erode

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (14/03/2019)

கடைசி தொடர்பு:14:36 (14/03/2019)

மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்... ஈரோட்டில் ஒருநாள் பயிற்சி வகுப்பு !

சமீபகாலமாக, வங்கி சேமிப்பு, தங்கத்தில் முதலீடு போன்றவற்றில் வருமான வளர்ச்சி பெரிய அளவில் இல்லாததால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். வழக்கமான சேமிப்புத் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறப்பானது என்ற எண்ணம், முதலீட்டாளர்கள் மத்தியில் பரவிவருகிறது. அதேபோல, பங்குச் சந்தையில் நேரடி முதலீடு செய்யும் அனுபவம் இல்லாதவர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பாதுகாப்பானதாக நம்புகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் எவையெவை, எத்தனை வகை முதலீடுகள் இருக்கின்றன, முதலீட்டுக் காலத்தை எப்படி முடிவுசெய்வது என்பன போன்ற சூட்சுமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நாணயம் விகடன் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்னும் ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது (கட்டணம் ரூ.3,000). ஏற்கெனவே, சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்

அடுத்த பயிற்சி வகுப்பு, ஈரோட்டில், வரும் மார்ச் 31-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில், மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்ய வேண்டும், லாபம் தரக்கூடிய ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி, எந்த ஃபண்ட் யாருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பன உட்பட, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் பலவும் கற்றுத் தரப்படும்.

இந்தப் பயிற்சியை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற, ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்., நிறுவன இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன் வழங்குகிறார். மேலும் விவரங்களுக்கு : 9940415222


[X] Close

[X] Close