``என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை" - பொள்ளாச்சி பார் நாகராஜ்! | Pollachi issue Bar Nagaraj petition to Coimbatore collector

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/03/2019)

கடைசி தொடர்பு:16:43 (14/03/2019)

``என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை" - பொள்ளாச்சி பார் நாகராஜ்!

என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்படும் பார் நாகராஜ் கூறியுள்ளார்.

என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்படும் பார் நாகராஜ் கூறியுள்ளார்.

பார் நாகராஜ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடிதடி பஞ்சாயத்தில் சிக்கிக் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ். ``அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள இவரது டாஸ்மாக் பாரை பொது மக்கள் நேற்று அடித்து உடைத்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பார் நாகராஜ், பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் பாலியல் வழக்குக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. செக் மோசடி செய்தது தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறிதான், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரிடம் பேச என்னை அழைத்துச் சென்றார். ஆனால், எனது அரசியல் மற்றும் பொது வாழ்வில் எனக்கு வேண்டாத சில விஷக்கிருமிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

பார் நாகராஜ்

இது என்னையும், என் குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சுலுக்கு ஆளாக்கியுள்ளது. வேறு யாரோ இருக்கும் ஆபாச வீடியோவை, நான் என்று சொல்லி தவறான விஷயத்தைப் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராக தயாராக இருக்கிறேன். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தை பிறந்து 25 நாள்களே ஆன நிலையில், என்னை என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர்.

எனவே, என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்” என்றார்.


[X] Close

[X] Close