‘கொடி அகற்றம்; சின்னம் இருக்கு’- விதிகளை மீறும் பா.ஜ.க | Lok sabha Elections 2019 - Virudhunagar BJP Doesn't follow Election Rules people

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:36 (16/03/2019)

‘கொடி அகற்றம்; சின்னம் இருக்கு’- விதிகளை மீறும் பா.ஜ.க

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பா.ஜ.க கொடிக்கம்பத்தில் சின்னத்தை அகற்றாமல் கொடியை மட்டும் அகற்றி பா.ஜ.க-வினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளனர்.

பாஜக

மக்களவைத் தேர்தலுக்கான தேதி, மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது. கட்சி மற்றும் சாதி சங்கங்களின் தலைவர் சிலையோ, புகைப்படமோ பொது இடங்களில் இருக்கக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சியினருடன் இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஏற்கெனவே நடந்துள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், தலைவர்களின் படங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. மேலும், கட்சிக் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டுவருகின்றன. விருதுநகர் பைபாஸ் சாலையில், ஆட்சியர் அலுவலகம் அருகே பா.ஜ.க சார்பில் மிகப்பெரிய கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அதில் இருந்த கொடி மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. கம்பத்தின் உச்சியில் அக்கட்சியின் தாமரைச் சின்னம் உள்ளது. இதை அகற்ற இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகி 4 நாள்களாகியும்கூட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகிலேயே விதிகள் மீறப்பட்டிருப்பதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


[X] Close

[X] Close