முதுமலை காட்டுத்தீயை அணைக்க கோவையிலிருந்து வந்த ஹெலிகாப்டர்! | Fire in mudhumalai forest, helicopter arrives to control forest fire

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (14/03/2019)

முதுமலை காட்டுத்தீயை அணைக்க கோவையிலிருந்து வந்த ஹெலிகாப்டர்!

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட முதுமலை புலிகள் காப்பகம், ஆசியாவிலேயே அதிக புலிகள் வாழும் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள் மற்றும் அரிய வகை விலங்குகளின் வசிப்பிடமாகவும் முதுமலை புலிகள் காப்பகம் இருக்கிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, நீலகிரி மாவட்டம் கடும் வறட்சியை  எதிர்காெண்டுவரும்நிலையில், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், விலங்குகள் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருவதைத் தவிர்க்க, வன விலங்குகளுக்காக வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாெட்டிகளில், வனத்துறையினர் தண்ணீர் நிரப்பிவருகின்றனர்.

முதுமலை வனப்பகுதி

கடந்த  மாத இறுதியிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மசினகுடி, பாெக்காபுரம், சிரியூர், சீகூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீயில் கருகி நாசமானது. தீயை அணைக்க வேட்டை தடுப்பு காவலர்கள் , தீ தடுப்பு காவலர்கள், வனத்துறையினர், பாெதுமக்கள்  ஆகியோர் இரவு பகலாகப் போராடி தீயை கட்டுக்குள் காெண்டுவந்தனர். அதே நேரம், வனப் பகுதிக்கு தீ வைத்தவர்களைப் பிடிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் பணியின்பாேது, ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக, வனப் பகுதியில் தீ வைப்பவர்கள்குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்தது வனத்துறை.

வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ

இந்நிலையில், நேற்று முன்தினம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலப் பகுதியான சீகூர் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் விடிய விடிய எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுப்பட்டனர். முழுமையான கட்டுக்குள் காெண்டுவர முடியாததால், வனத்துறை உயர் அதிகாரிகளின் ஆலாேசனைப்படி, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் வரவழைக்க வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் முறையிட்டனர். இதைத் தாெடர்ந்து, கலெக்டர் கேட்டுக்காெண்டதன் அடிப்படையில் கோவை, சூலுார் விமான தளத்தில் இருந்து, இன்று காலை 7 மணியளவில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் காெண்டுவரப்பட்டது. ஆனால், அதற்குள் வனத்துறையினரே பாேராடி தீயை கட்டுக்குள் காெண்டுவந்த நிலையில், வானில் வட்டமடித்த ஹெலிகாப்படர், காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டதை அறிந்து திரும்பியது. 

 


[X] Close

[X] Close