பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; தனி நீதிமன்ற விசாரணை தேவை! - கனிமொழி | DMK kanimozi Asks special investigation on Pollachi sexual abuse case

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (14/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (14/03/2019)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; தனி நீதிமன்ற விசாரணை தேவை! - கனிமொழி

“பொள்ளாச்சியில், பெண்கள்மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு மூடி மறைக்கப்பார்க்கிறது. இந்தப் பாலியல் வன்முறை சம்பவத்தைத் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்” என தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம்மூலம் வந்தார், தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி. அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொள்ளாச்சியில் பெண்கள்மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு மூடி மறைக்கப்பார்க்கிறது. இது, மக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    

கனிமொழி

இதுபோன்ற பாலியல் தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ அல்லது அந்தப் பெண்ணை அடையாளம் காட்டும்படியான விவரங்களையோ வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டிருப்பது, தொடர்ந்து இனிமேலும் இச்சம்பவம் குறித்து யாரும் புகார் கொடுக்கக் கூடாது  என்ற நோக்கில், காவல் துறை அச்சுறுத்தும் விதமாகவே உள்ளது.

அதேபோல, கடந்த 7 ஆண்டுகளாக இந்தக் கொடுமை நடந்துவருகிறது என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய  அனைத்து குற்றவாளிகளையும் கைதுசெய்து, உரிய விசாரணை நடத்திட வேண்டும். இந்த விவகாரத்தில், கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனின் அணுகுமுறை சரியாக இருக்காது என்பதை நான் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவத்தைத் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close