திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கு விசாரணை - தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றம் | thirupuvanam ramalingam murder case will inquiry on NIA

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (14/03/2019)

கடைசி தொடர்பு:21:30 (14/03/2019)

திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கு விசாரணை - தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்

திருபுவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை, தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் வந்த தேசியப் புலனாய்வு போலீஸார், இன்று விசாரணையைத் தொடங்கினர்.

திருபுவனம் பாமக பிரமுகர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்  ராமலிங்கம். இவர், பா.ம.க-வின் திருபுவனம் முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர், மத மாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதாகக் கூறி, கடந்த பிப்ரவரி   5-ம் தேதி இரவு, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைவழக்கு தொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் 16 பேர்மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுவரைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஓட்டுநர் உட்பட, இவ்வழக்கில் 10 பேரை போலீஸார்  கைது செய்துள்ளனர். மீதமுள்ள 6 பேரை தேடிவருகின்றனர்.மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கிய இந்தக் கொலைவழக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்திவந்தது. இந்நிலையில், ராமலிங்கம் படுகொலைவழக்கு தேசியப் புலனாய்வு அமைப்புக்கு  மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேசியப் புலனாய்வு அமைப்பின் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில், எஸ்ஐ மற்றும் போலீஸார் சென்னையிலிருந்து திருபுவனத்துக்கு வந்து  விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இவர்கள், இரண்டு நாள்கள் திருவிடைமருதூரில் தங்கியிருந்தபடியே உள்ளூர் போலீஸார், புகார் கொடுத்தவர்கள் மற்றும் இந்தக் கொலைகுறித்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை  செய்ய உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close