பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களின் ஃபேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டன! | Pollachi Jayaraman son's facebook account deactivated

வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (14/03/2019)

கடைசி தொடர்பு:16:27 (15/03/2019)

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களின் ஃபேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டன!

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களின் ஃபேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டன.

மகன்களுடன் பொள்ளாச்சி ஜெயராமன்

மகன்களுடன் பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில், ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாக, ஆரம்பம் முதலே கூறப்பட்டுவந்தது. குறிப்பாக, துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதாகப் பேசப்பட்டுவந்தது. ஆனால், இதைப் பொள்ளாச்சி ஜெயராமன் திட்டமிட்டு மறுத்துவந்தார். குறிப்பாக, “பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்னிடம்தான் உதவிக்காக வந்தனர். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி, காவல்துறைக்கு உத்தரவிட்டதே நான்தான். சி.பி.ஐ, இண்டர்போல் வந்து விசாரணை நடத்தினாலும் நாங்கள் தயார்” என்றெல்லாம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருந்தார்.

பேஸ்புக்

இதனிடையே, ஜெயராமனின் மகன்களது ஃபேஸ்புக் கணக்கில் சில தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது அவர்களது இரண்டு ஃபேஸ்புக் கணக்குகளும் மூடப்பட்டுள்ளன (Deactivate). அதன்படி, ஜெயராமனின் பெரிய மகன் அக்னீஸ் முகுந்தன் (J.agnish Mugundhan) மற்றும் சிறிய மகன் பிரவீனின் (Pravin Jayaraman) கணக்குகள் மூடப்பட்டுள்ளன. வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இவர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிகமாகவாஅல்லது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா. எதற்காக மூடப்பட்டுள்ளது? என்பதற்கு, பொள்ளாச்சி ஜெயராமனும் அவரின் மகன்களும்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தநிலையில் நேற்று இரவு  பொள்ளாச்சி ஜெயராமனின் மூத்த மகனுடைய ஃபேஸ்புக் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டாவது மகன் பிரவீன் மீண்டும் ஆக்டிவேட் செய்துவிட்டான். அதில் ஃபிரைவேசி செட்டிங்குகள் மாற்றபட்டுள்ளன.


[X] Close

[X] Close