கழிவுநீர் பக்கத்து வீட்டுக்குச் சென்றதால் பெண் கொலை! - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை | Cuddalore Court Judgement News

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (15/03/2019)

கடைசி தொடர்பு:11:09 (15/03/2019)

கழிவுநீர் பக்கத்து வீட்டுக்குச் சென்றதால் பெண் கொலை! - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் பெண் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை 

கடலூர்

கடலூர் குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயா(32).  கணவனை இழந்த இவர், தந்தை பக்கிரி, தயார் கமலா ஆகியோருடன் வசித்துவந்தார்.  இந்நிலையில்,  கடந்த 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 -ம் தேதி,  இவர் வீட்டுக் கழிவு நீர், பக்கத்து வீடான முருகன் என்பவர் வீட்டுக்கும் சென்றுள்ளது. இதனால் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர், விஜயாவின் பெற்றோரைத் திட்டியுள்ளனர். மறுநாள், விஜயா தண்ணீர் பிடிக்கச் சென்றபோது முருகன் அவரை வழி மறித்து, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். அதோடு, முருகன் குடும்பத்தினரும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விஜயா உயிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து முருகன், அவரது மனைவி ஜெயா, இவர்களது மகன்கள் ஜெகன், அபினேஷ், முருகனின் சகோதரர் கலியமூர்த்தி, அவரது மனைவி விஜயலெட்சுமி ஆகிய 6 பேரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு, கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன்... முருகன் , அவரது மனைவி ஜெயா, மகன்கள் ஜெகன், அபினேஷ், சகோதரர் கலியமூர்த்தி, அவரது மனைவி விஜயலெட்சுமி ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில், முருகனின் மகன்கள் ஜெகன், அபிஷேக் ஆகிய இருவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வப்பிரியா ஆஜரானார். கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 


[X] Close

[X] Close