கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்! | Snake bite women near Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (15/03/2019)

கடைசி தொடர்பு:13:00 (15/03/2019)

கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்!

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மனைவி சந்தோஷ் (35) என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது பாம்பு சந்தோஷைக் கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வேகமாக கூச்சலிட்டபடியே மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கு பணியில் இருந்த சக தொழிலாளர்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர்.

கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்

உடன் இருந்த சக தொழிலாளர்கள் பாம்புடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சந்தோஷை சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அதன் பின்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மங்கலம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு, கடித்த பாம்புடன் பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


[X] Close

[X] Close