வேலைதேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி! - சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் | Patrician College with the support of CII will be organising a Mega Job Fair

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (15/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (15/03/2019)

வேலைதேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி! - சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (16 மார்ச்) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சி ஐ ஐ எனப்படும் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (confederation of indian industry) இணைந்து மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. திகழ்வது இந்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணையுடன் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 60 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்குத் தேசிய வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இலவசமாக நடைபெறும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. வேலை தேடும் இளைஞர் இளைஞிகள் இந்த முகாமில் பங்குபெற்று பயன்பெறுங்கள்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தேதி - மார்ச் 16

நேரம் - 9:00am to 5:00pm

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close