`வீரப்பன் மகள்களை பிரசாரத்துக்கு அழைக்கலாம்!’ - திட்டம்தீட்டும் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் | Veerappan's daughters can be called for a campaign! '- Duraimurugan, Jegathratchagan

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (15/03/2019)

கடைசி தொடர்பு:13:52 (16/03/2019)

`வீரப்பன் மகள்களை பிரசாரத்துக்கு அழைக்கலாம்!’ - திட்டம்தீட்டும் துரைமுருகன், ஜெகத்ரட்சகன்

``தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக `சந்தன’ வீரப்பன் மகள்கள் இருவரையும் மீண்டும் அழைக்கலாம்’’ என்கிற யோசனையில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.

வீரப்பன்

2009 நாடாளுமன்றத் தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக ஜெகத்ரட்சகன் களம் கண்டார். அப்போது, `சந்தன’ வீரப்பனின் மகள்கள் வித்யாராணி மற்றும் விஜயலட்சுமி இருவரும் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு கொடுத்தனர். ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வீரப்பனின் மகள்கள் கலந்துகொண்டு அவரை ஆதரித்துப் பேசி ஓட்டுக் கேட்டனர். இந்தக் கூட்டத்தில், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் சகோதரி சின்னபொண்ணுவும் பங்கேற்றிருந்தார். துரைமுருகனும், அந்தக் கூட்டத்தில் இருந்தார். 

இந்த நிலையில், வேலூர் தொகுதியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்தும், அரக்கோணம் தொகுதியில் மீண்டும் ஜெகத்ரட்சகனும் போட்டியிடுகிறார்கள் என்று தகவல் வருகின்றன. இருவரையும் ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வீரப்பனின் மகள்களை மீண்டும் அழைக்கலாம் என்கிற யோசனையில் ஜெகத்ரட்சகன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி அவர், துரைமுருகனிடம் ஆலோசனை நடத்திவருவதாகவும் தி.மு.க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருப்பதால், வன்னியர் சமுதாய வாக்குகளை அதிகமாகப் பெறுவதற்காக சந்தன வீரப்பனின் மகள்களை அழைத்துவர துரைமுருகனும், ஜெகத்ரட்சகனும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


[X] Close

[X] Close