தொடங்கியது பங்குனி உத்திரம்! - அடுத்த 10 நாள்களுக்கு கோலாகலம்தான் | Panguni festival started at Palani

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/03/2019)

கடைசி தொடர்பு:14:40 (15/03/2019)

தொடங்கியது பங்குனி உத்திரம்! - அடுத்த 10 நாள்களுக்கு கோலாகலம்தான்

பழநியில், பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது. பழநி முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழாவைப் போல விமரிசையாக நடைபெறும் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா, இன்று தொடங்கி  10 நாள்களுக்கு நடக்கவிருக்கிறது. இன்று காலை, திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திரம் 

உத்திரத் திருவிழா மார்ச் 24 வரை நடைபெற இருக்கிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக, மார்ச் 20-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும்.   21-ம் தேதி, கிரிவீதியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறும். கொங்கு மண்டலத்தில் உள்ள பக்தர்கள் அதிகம் பங்கேற்கும் திருவிழாவாக பங்குனி உத்திரத் திருவிழா இருக்கிறது.

இதற்காக, கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவருவார்கள். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து காவடியாகக் கொண்டுவந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள். விழா நடைபெறும் 10 நாள்களும் சுவாமி தந்தப் பல்லக்கு, தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி ஆட்டுக் கிடா உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும். விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் கவனித்துவருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close