`பொள்ளாச்சி வழக்கில் யாரும் ஆஜராக வேண்டாம்! - ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்கள் | Lawyers don't appear in Pollachi sexual abuse case

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (15/03/2019)

கடைசி தொடர்பு:17:06 (15/03/2019)

`பொள்ளாச்சி வழக்கில் யாரும் ஆஜராக வேண்டாம்! - ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்கள்

``பொள்ளாட்சி தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக வேண்டாம்’’ எனப் பெண் வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொள்ளாசி விவகாரத்தில் பெண் வழக்கறிஞர்கள்  ஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களாக பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பரபரப்பை உருவாக்கியது. சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து பலர் அறிக்கைகளும் கண்டனங்களும் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துவருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு, பெண் வழக்கறிஞர்கள் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் பல்வேறு கண்டன பதாகைகளுடன், கோஷங்கள் எழுப்பி தங்களது கண்டனத்தைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் வழக்கறிஞர்கள்  ஆர்ப்பாட்டம்

அப்போது அவர்கள் கூறுகையில், ``பொள்ளாச்சி தொடர்பான விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். மேலும், தவறுகள் இனி நடைபெறாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் ரகசியம் காக்கப்பட வேண்டும். சட்டங்களை கடுமையாக்க வேண்டும். அதேபோல் பாலியல் புகார் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது’’ எனவும் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close