`ஐ லவ் வோட்!’ - வேலூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த பிரமாண்ட வாசகம் | 'I Loved Vote' Election Campaign in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:13:56 (16/03/2019)

`ஐ லவ் வோட்!’ - வேலூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த பிரமாண்ட வாசகம்

வேலூரில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ‘ஐ லவ் வோட்’ என்ற வாசகத்தின் பிரமாண்ட வடிவமைப்பாக நின்றதால் பார்வையாளர்கள் வியந்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்களிக்க, அனைத்துத் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Systematic Voter‘s Education and Electoral Participation -SVEEP) நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி, வேலூர் ஊரீசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுமார் 500 பேர் ‘‘ஐ லவ் வோட்... (I LOVE VOTE)’’ என்ற பிரமாண்டமான பெரிய வாசகத்தின் வடிவமைப்பாகக் கைகோத்து நின்றனர். 

இந்த நிகழ்வு, பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசுகையில், ``தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல் முறை, வாக்குச் சீட்டிலிருந்து மின்னணு இயந்திரத்துக்கு மாறி யாருக்கு வாக்களித்தோம் என்ற தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளும் நவீன முறைக்கு வளர்ந்திருக்கிறது. ஓட்டுக்குப் பரிசு, பணம் பெறக்கூடாது. நியாயமான முறையில் ஓட்டுப்போட்டு ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள்’’ என்றார்.


[X] Close

[X] Close