`இருப்பவர்கள் கொடுக்கலாம்; இல்லாதவர்கள் எடுக்கலாம்!’ - 22 வயது இளைஞரின் அசாத்திய சேவை! | Story about 22 years old boy social service in sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (15/03/2019)

கடைசி தொடர்பு:20:15 (15/03/2019)

`இருப்பவர்கள் கொடுக்கலாம்; இல்லாதவர்கள் எடுக்கலாம்!’ - 22 வயது இளைஞரின் அசாத்திய சேவை!

சிவகங்கை பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு உணவும், உடையும், கல்வி பயில வழியில்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறது `தாயின் கருவறை' அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் புதிய முயற்சியாக, சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு அருகே,  `அட்சயப்பாத்திரம்' என்னும் பெயரில் உணவுகளைப் பத்திரப்படுத்த குளிர்சாதனப் பெட்டியும், `அன்புச் சுவர்' என்கிற பெயரில் உடைகளைப் பத்திரப்படுத்த பீரோ வசதிகளையும் தற்போது ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

அட்சயப் பாத்திரம்

தன் பதினேழு வயதில், இந்த அறக்கட்டளையைத் தொடங்கி, பல சேவைகளைச் செய்துவருபவர் மணிகண்டன் என்னும் இளைஞர். அவரிடம் பேசினோம், ``தாய், தந்தையில்லாத, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 34 எழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்றவர்கள் யாரும் சிகிச்சை எடுத்தால் அவர்களுடன் தங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம். இதுவரைக்கும் ஆயிரம் பேருக்கு ரத்ததானம் செய்திருக்கிறோம். 

சேவை

இப்போது புதிதாக, ஹோட்டல்களில் மிஞ்சும் உணவுகளை வைக்க குளிர்சாதனப் பெட்டியும், தங்களுக்குத் தேவைப்படாத உடைகளை வைக்கப் பெட்டி வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறோம். உணவு, உடை தேவைப்படுபவர்கள்  இங்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆரம்பத்தில் நான் மட்டும்தான் இந்த சேவைகளைச் செய்து வந்தேன். இப்போது என் நண்பர்களும் என்னோடு இணைந்திருக்கிறார்கள். என் ஊரான சிவகங்கையில் பசியோடு யாரும் உறங்கப் போகக் கூடாது அதுதான் எங்கள் விருப்பம். 

முகாம்

`காசில்லாமல் கல்வி கற்க முடியாத நிலையும், வறுமையால் பட்டினி கிடக்கும் நிலைமையும் எங்கள் ஊரில் யாருக்கும் வரக்கூடாது.' இதுவே எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரம் '' என்கிறார் மணிகண்டன் என்கிற குட்டிமணி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close