`நடவடிக்கை எடுக்கலைன்னா ஓட்டு இல்லை' - பொள்ளாச்சி சம்பவத்தில் கொதிக்கும் மக்கள்! | We won't vote in election if proper action is not taken against the accused in pollachi sexual abuse case

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (15/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (15/03/2019)

`நடவடிக்கை எடுக்கலைன்னா ஓட்டு இல்லை' - பொள்ளாச்சி சம்பவத்தில் கொதிக்கும் மக்கள்!

பொள்ளாச்சி

மொத்தம் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி அவர்களை ஆபாசமாகச் சித்திரித்து மிக மோசமான வன்மச் செயலில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, யஷ்வந்த் உள்ளிட்ட குற்றவாளிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதில் மிக மிக அலட்சியப் போக்கில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்தும் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட இரு இடங்களில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் இயக்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், திரைப்படத்துறையிலிருந்து `மேற்குத் தொடர்ச்சி மலை' பட இயக்குநர் லெனின் பாரதி, `அறம்' கோபி உள்ளிட்டோர் பங்கெடுத்துக்கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து கூறுகையில், ``அதிகார வர்க்கம் இந்தச் சம்பவத்தை எத்தனை அலட்சியமாகக் கையாளுகிறது என்பதற்கு அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை சொல்வதும் அரசாணையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் பெயர் இடம்பெறுவதுமே சாட்சி. இவர்கள் கையில் இந்த விசாரணை எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும். சி.பி.ஐ-க்கு விசாரணையை மாற்றியதோடு மட்டுமல்லாமல் இந்தச் சம்பவத்தில் விரைந்து விசாரணை முடிக்கப்பட வேண்டும். இதில் நீதி கிடைக்காத பட்சத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதன் விளைவு எதிரொலிக்கும். எங்கள் பாதுகாப்புக்கும் எங்களுடைய பிள்ளைகள் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தராத எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஒட்டு போடமாட்டோம்" என்று திட்டவட்டமாகப் பேசினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close